Sunday, September 10, 2017

அன்புள்ள  தோழமைகளே,

                      நாம் ஒவ்வொருவரும் இந்த உலகில் நிகழும்  பல்வேறு நிகழ்வுகளை நமது சமுகத்தின் அடிப்படையிலும் நமது எண்ணத்தின் அளவிலும் கற்றுக் கொள்கிறோம்.அப்படி கற்றுக் கொண்ட நமது எண்ணங்களே நமது அனுபவமாக மலர்கின்றன.அத்தகைய அனுபவங்கள் பிறருக்கு பயன்படும் என்ற சிந்தனை நம்மில் எத்தனையோ பேருக்கு விழிப்பதுண்டு,ஆனால் அதனை நிகழ்  உலகில் செயல்படுத்துவது என்பது சற்று கடினமான  காரியம்.அதே நேரத்தில் நாம்  வாழக்கூடிய இந்த இணைய உலகில் நம் அனுபவங்களை பகிர்வது என்பது சாத்தியமே ! 


                    நம்முடைய அனுபவங்கள் அது எதுவாக இருப்பினும் சரி , பிறருக்கு சிறிதளவேனும் பயன்பட்டால் அது நம்மளவில் மிகப்பெரிய திருப்பதியை தரும் என்பதே நிதர்சனம்!இங்கே நான் கற்றதை கற்பிக்கிறேன் ஒரு தோழனாக! அதே போல நீங்கள்  கற்றதை கற்றுக் கொடுங்கள் ஒரு சினேகிதனாக ...! 




இப்படிக்கு 
உங்கள் தோழன் 
புதுமைச்சிற்பி


குறிப்பு :இது ஒரு திறந்த மடல்,உங்கள் அனுபவங்களை இங்கே    தாராளமாக பதிவிடலாம்  .

அன்புள்ள  தோழமைகளே,                       நாம் ஒவ்வொருவரும் இந்த உலகில் நிகழும்  பல்வேறு நிகழ்வுகளை நமது சமுகத்தின் அடிப்படையிலும் நமது எ...